மை தருமபுரி இயற்கை தேசம் அமைப்பின் சார்பாக அப்துல் கலாம் 91வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி ராமாக்காள் ஏரியில் பனை விதைகள், விதைப்பந்துகள் நடப்பட்டது.
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மை தருமபுரி அமைப்பின் சார்பாக தருமபுரி ராமாக்காள் ஏரியில் பனை விதைகள் மற்றும் விதைப்பந்துகள் நடப்பட்டது. மண்ணில் விழுவது தப்பில்லை, ஆனால் விதையாக விழுந்து மரமாக எழு என்று கலாம் அவர்களின் அறிவுரைகளோடு மை தருமபுரி அமைப்பின் சார்பாக இயற்கை சார்ந்த சேவைகளை இயற்கை தேசம் என்ற பெயரில் ஆரம்பித்துள்ளோம். முதன் முதலில் கலாம் அவர்களின் பிறந்தநாளில் பனை விதைகள் 150, விதைப்பந்துகள் 400 என மொத்தம் 550 விதைகள் நடப்பட்டது.
இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தருமபுரி நகர காவல் ஆய்வாளர் திரு.நவாஸ் அவர்கள் கலந்து கொண்டு விதைப்பந்துகள் மற்றும் பனை விதைகளை நட்டார். மை தருமபுரி இயற்கை தேசம் ஒருங்கிணைப்பாளர் திரு.முஹம்மத் ஜாபர் அவர்கள் தலைமையில் அமைப்பின் சார்பாக தமிழ்செல்வன், அருணாச்சலம், ராகவன், சசி தமிழரசன், தாரணி, சந்தோஷ், லாவண்யா, தமிழரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.


