பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தர்மபுரி மேலாண்மை துறை சார்பில் மேதகு அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடுதல் விழா மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னதாக இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை வகித்தார் முனைவர் பி கார்த்திகேயன் அவர்கள் பேராசிரியர் மேலன்மை துறை தலைவர் பொறுப்பு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் முனைவர் வேலவன் அரசு கலைக் கல்லூரி அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார், சிறப்பு அழைப்பாளர் முனைவர் பா கி கிள்ளிவளவன் அரசு கலைக் கல்லூரி தர்மபுரி அவர்கள் அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடுதல் மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி முடிவில் ஆர்டி சுரேஷ் உதவி பேராசிரியர் மேலாண்மை துறை அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார் முனைவர் தஸ்நீம் முனைவர் கார்த்திகா முனைவர் முஹம்மத் ஷமி ஆகியோர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்


