தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆராய்ச்சி மைய வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வை ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் P மோகனசுந்தரம் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
மேலும் இப்பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய மாணவ மாணவியர்கள், பேராசிரிய- பேராசிரியைகள் ஆகியோர் மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர். இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும் ஆங்கிலத்துறை பேராசிரியருமான முனைவர் சி. கோவிந்தராஜ் மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் முனைவர். காமராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.


