Type Here to Get Search Results !

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட பத்மா குடும்பத்திற்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்க பாமக தலைவர் மரு. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.

இரண்டு தினங்களுக்கு முன்பு கேரளாவையும் தமிழகத்தையும் உலுக்கிய நரபலி சம்பவத்தில் தருமபுரி மாவட்டம், எர்ரஹள்ளியை சேர்ந்த பத்மா என்பவர் போலீ சாமியரால் நரபலி கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், வறுமை காரணமாக கேரளத்திற்கு சென்று பரிசுச்சீட்டு விற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் நரபலி தரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தறிவு அதிகம் பெற்ற கேரளத்தில் தான் நரபலி போன்ற மூடநம்பிக்கைகளும், கொடூரங்களும் அதிகமாக நிலவுகின்றன. எந்த பின்புலமும் இல்லாமல் கேரளத்திற்கு வாழ்வாதாரம் தேடிச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும்!.

தருமபுரி மாவட்டத்திற்கு வேலைவாய்ப்பு இல்லாதது தான் மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல முதன்மை காரணம். தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கொல்லப்பட்ட பத்மாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies