தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை தலைமையில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஒகேனக்கல்லில் உள்ள மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மீன் உற்பத்தி மையத்தை ஆய்வு மேற்கொண்டு மீன் குஞ்சுகளை தொட்டியில் விட்டனர். அதனை அடுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதலை பண்ணையையும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது முதலைப் பண்ணையில் எத்தனை முதலைகள் உள்ளது அவைகளுக்கு எவ்வாறு உணவு அளிக்கப்படுகிறது என்றும் முதலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் மற்றும் முதலைகளை பராமரிக்க எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என்பது குறித்து அங்குள்ள வனத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வில் உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன் சிந்தனை செல்வன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாந்தி சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி வெங்கடேஸ்வரன் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


