நிகழ்ச்சியில் நிறுவனர், பொதுசெயலாளர். சுரேஷ் கண்ணன் பேசியதாவது; தமிழகம் முழுவதும் நமது அமைப்பில் 12 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் மாற்றுதிறனாளிகள் பொருளதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறோம், தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்களை மாற்றுதிறனாளிகளுக்காக ஏற்படுத்தி தர வேண்டும். மனித உரிமை பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து தீர்வு காண்கிறோம்.
தமிழகத்தில் கொரோனா முடிந்து தற்போது தான் சரசாரி வாழ்க்கைக்கு மக்கள் வந்துள்ளனர். மின்சார கட்டணம் ஏழை எளிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது. எனவே மின் கட்டண உயர்வை ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும். ஒன்றிய அரசு கலால் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உக்ரைன் போர் விஷயத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு ரஷ்ய உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். எனவும் தமிழகத்தில் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருந்த போதும், கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் முடுக்கி விட வேண்டும் என கூறினார்.
கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் சிவஞானம், தலைமை கழக ஒருங்கிணைப்பாளர் வினோத், இணை செயலாளர். சரவணன், முஸ்லிம் கூட்டமைப்பு. அப்துல்கலீம், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், துணை தலைவர். வெங்கடேசன் , மாநில பொறுப்பாளர், தளபதி கிஷோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


