பள்ளப்பட்டி, மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (தமிழ்த்துறை) தருமபுரி மாவட்டத் தமிழ்க்கவிஞர் மன்றம், மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவை ஆகியவை இணைந்து மேதகு அப்துல்கலாம் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டுச் சிறப்புக் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் நடைப்பெற்றது.
நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த் நிகழ்விற்குத் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் நா.மகேந்திரன் முன்னிலை வகித்தார். தருமபுரி மாவட்டத் தமிழ்க்கவிஞர் மன்றத்தின் தலைவர் பாவலர் கோ.மலர்வண்ணன் வாழ்த்துரை வழங்கினார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் வரவேற்றுப் பேசினார்.
பட்டிமன்றத்தின் நடுவராகத் தமிழ்மகன் ப.இளங்கோ இருந்தார். நிறைவாகத் தருமபுரி மாவட்டத் தமிழ்க்கவிஞர் மன்றத்தின் செயலாளர் கா.இராசகுமாரன் நன்றி கூறினார். நிகழ்வில் கவிஞர்கள், பேச்சாளர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள்,மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


