Type Here to Get Search Results !

நல்லம்பள்ளியில் பஞ்சாயத்து அலுவலகம் உள்பட 4 இடங்களில் அடுத்தடுத்து நடந்த திருட்டு தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் ஊராட்சி மன்றம் செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் பஞ்சாயத்து அலுவலகத்தை நேற்று முன்தினம் மாலை ஊராட்சி செயலர் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் மறுநாள் காலை வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தனர். 

அப்போது அலுவல கத்தில் இருந்த பைல்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தது. மேலும் 30 ஆயிரம் மதிப்புள்ள டிவி திருடு போனது தெரியவந்தது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் அதியமான் கோட்டை போலீசில் புகார் அளித்தார். இதேபோன்று வாரச்சந்தை வளாகப் பகுதியில் உள்ள சரவணன்(48) என்பவர் நடத்தி வந்த டீ கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 2500 ரொக்க பணத்தை திருடி சென்றனர். அதனை அடுத்து அதியமான் கோட்டை கீழ் காளியம்மன் கோவில் வளாகத்தில் இருந்த 5 அடி உண்டியலை தூக்கி வந்து அதியமான் கோட்டை ஏரியில் வைத்து உடைத்து உண்டியலில் இருந்த சுமார் 2000 மேல் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டி யலை ஏரியிலேயே வீசி சென்றுள்ளனர்.

இந்த திருட்டு சம்ப வங்கள் குறித்து அதியமான் கோட்டை போலீசார் தகவல் அறிந்து வந்து அப்பகு திகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்தனர். மேலும் காளியம்மன் கோவில் உண்டியலை திருடர்கள் அலேக்காக தூக்கிச் செல்லும் காட்சி களும் பதிவாகியிருந்தது. அதியமான் கோட்டை ஏரியில் தண்ணீரில் வீசி சென்ற உண்டியலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில் நல்லம்பள்ளி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த செரபாண்டராஜ் (வயது35), கார்த்திக் (34) மற்றும் 18 வயது நிறைவடையாத ஒரு சிறுவன் என மூன்று பேரும் சேர்ந்து கொண்டு பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விசாரணையில் மூன்று பேரும் திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து அதியமான் கோட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். இதேபோன்று நல்லம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இந்த நபர்கள் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies