தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளி சோதனை சாவடியில், காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் மணிவண்ணன் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, அந்த வழியாக மினி லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டார், அந்த வாகன ஓட்டுநர் டிப்டாப்பாக உடை அணிந்து காணப்பட்டார்.
சந்தேகத்தின் பேரில் அந்த வாகத்தை ஓட்டிவந்த ஓட்டினரிடம் விசாரணை செய்த போது அவர் பெண் குரலில் பேசினார், இதனால் சந்தேகமடைந்த போலீசார் பின்னர் தீவிரமாக விசாரணை செய்த போது வாகனத்தை ஓட்டி வந்த ஆண் இல்லை பெண் என்பவது தெரியவந்தது.
அப்பெண் பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு, சுமார் 900 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி செல்வது தெரியவந்தது, இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த விழுப்புரத்தை சேர்ந்த ஈஸ்வரி (36) என்பரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.


