இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வழக்கறிஞர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பாலக்கோடு பேருந்து நிலையத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொண்டர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர்.பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சரவணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் கணபதி, கோவிந்தசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, பாலகிருஷ்னன், சுப்ரமணி, கவுன்சிலர் விமலன், குருமணிநாதன், நஞ்சுண்டன், ரவிச்சந்திரன், முன்னாள் தொகுதி அமைப்பாளர் கிருஷ்ணன், முன்னாள் நகர துணை செயலாளர் கண்னையன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் கோவிந்தசாமி, நகர இணை செயலாளர் லட்சுமி கொளந்தை, நகர துணை செயலாளர் ஆறுமுகம், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் சக்திவேல், ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், சுமைதூக்குவோர் சங்க தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், பாலக்கோடு 18 வார்டு கிளை செயலாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.


