தமிழகத்தில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்விக்கொள்கை வகுப்பதற்காக மாண்புமிகு. த. முருகேசன், (புதுதில்லி உயர்நீதி மன்றம் முன்னாள் நீதியரசர்) அவர்கள் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. உயர்மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி மாநில கல்விக்கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் மண்டல அளவில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.