தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் 4.30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இலக்கியம்பட்டி ஏரி வளாகத்தில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், தருமபுரி மாவட்ட நேரு இளைஞர் மையம் சார்பில் தூய்மை பாரதம் 2.0 திட்டத்தின் கீழ் தருமபுரி அரசு கலைக்கல்லூரி மற்றும் ஸ்ரீகிருஷ்ணா செவிலியர் கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற மாபெரும் தூய்மைப்பணி மற்றும் மாபெரும் மரக்கன்றுகள் நடும்பணிகள் இன்று (21.10.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று கலந்து கொண்டு இலக்கியம்பட்டி ஏரி வளாகத்தில் மாபெரும் தூய்மைப்பணிகளை தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் உத்தரவின்படி தருமபுரி நகராட்சிக்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் மிக அருகாமையில், இலக்கியம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள இலக்கியம்பட்டி ஏரி ஏறத்தாழ 4.30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளதால் இந்த ஏரியினை புனரமைத்து மேம்படுத்தினால் மழை நீர் சேகரிப்பிற்கும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கும் சிறந்த இடமாக இந்த ஏரி அமையும் என்பதால் இந்த இலக்கியம்பட்டி ஏரியினை புனரமைத்து மேம்படுத்துவதற்கும், ஏரியினை சுற்றி அழகிய மரக்கன்றுகள், பூஞ்செடிகள் வைத்து பாதுகாத்து பராமரித்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் 4.30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இலக்கியம்பட்டி ஏரியில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், தருமபுரி மாவட்ட நேரு இளைஞர் மையம் சார்பில் பல்வேறு கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற மாபெரும் தூய்மைப்பணி மற்றும் மாபெரும் மரக்கன்றுகள் நடும்பணிகள் இன்று நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற மாபெரும் தூய்மைப்பணி மற்றும் மாபெரும் மரக்கன்றுகள் நடும்பணிகளை மேற்கொண்டார்கள்.
முன்னதாக இலக்கியம்பட்டி ஏரி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் தூய்மைப்பணி மற்றும் மாபெரும் மரக்கன்றுகள் நடும்பணிகளில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தூய்மையின் சபதம் என்ற உறுதிமொழியான ”மகாத்மாகாந்தி அரசியல் சுதந்திரம் மட்டுமல்லாமல் தூய்மையான மற்றும் மறுமலர்ச்சி இந்தியாவை கற்பனையில் கண்டார். மகாத்மாகாந்தி அடிமை விலங்கை உடைத்தெறிந்து இந்திய தாய்க்கு விடுதலை அளித்தார். இப்பொழுது நமது நாட்டை தூய்மையாக வைத்திருப்பதே நாம் நமது பாரத தாய்க்கு செய்யும் கடமையாகும். நான் தூய்மையை விரும்புகிறேன் தூய்மைக்காக என்னை அர்ப்பணிக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன்.
ஒவ்வொரு வருடமும் 100 மணிநேரம் அதாவது வாரத்திற்கு 2 மணிநேரம் தூய்மைக்காக என்னை அர்ப்பணிக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். நான் அசுத்தம் செய்யமாட்டேன் மற்றவர்களையும் அசுத்தம் செய்யவிட மாட்டேன், நான் என் குடும்பம், என் சுற்றுவட்டாரம், என் கிராமம் மற்றும் என் பணியிடம் ஆகியவற்றில் தூய்மையை புகுத்த முயற்சி மேற்கொள்வேன். உலக நாட்டினர் அனைவரும் நாகரிகம் உள்ளவர்கள் தூய்மை பார்ப்பவர்கள், அசுத்தம் செய்யமாட்டார்கள் அசுத்தம் செய்யவும் விடமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்த எண்ணத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் தூய்மை இந்தியா இயக்கம் பற்றி பிரச்சாரம் செய்வேன். நான் மேலும் 100 மனிதர்களை இந்த உறுதிமொழி ஏற்கவைப்பேன் என்று நான் இன்று உறுதி கூறுகிறேன். அந்த மனிதர்களையும் 100 மணிநேரம் தூய்மைப்பணியில் ஈடுபடுத்த நான் முயற்சி மேற்கொள்வேன். நான் மேற்கொள்ளும் ஒவ்வொரு நிலையும் என் பாரதம் தூய்மையடைய உதவும் என்று நான் நம்புகிறேன்” என்ற உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்த ஆய்வில் தருமபுரி வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன், தருமபுரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கே.தனபால், திரு.இரா.கணேசன், இலக்கியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.ர.சுதா, வட்ட நேரு இளைஞர் மையம் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.