பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக ஸ்வச் பாரத் 2.0 தொடர்ச்சியாக ஆராய்ச்சி மைய வளாகத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிகள் (பிளாஸ்டிக்) 20 கிலோ சேகரிக்கப்பட்டன.
இந்நிகழ்வை ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் துவக்கி வைத்தார் தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆங்கிலத்துறை பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் சி கோவிந்தராஜ் செய்திருந்தார்.