இக்கண்காட்சியில் தருமபுரி மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு உயர்தர இரகங்களை காட்சிப்படுத்தவும், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடலில் பங்கு பெற்று பயன்பெறலாம்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரி மாவட்டம் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலமாக அக்டோபர் 19 (19.10.2022) அன்று உலக உணவு தினத்தை முன்னிட்டு ”உயர்தர உள்ளூர் இரகங்கள் பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி” (Genetic Diversity Fairs) பாப்பாரப்பட்டியில் உள்ள PKS மஹாலில் நடைபெறவுள்ளது. மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி விவசாயிகளுக்கு தேவையான விரும்பத்தக்க குணங்களுடைய பராம்பரியமிக்க பல்வேறு உள்ளூர் இரகங்களை கண்டறிந்து இரக மேம்பாட்டுக்கான ஆய்வுகளில் பயன்படுத்தினால், நமது பகுதிக்கேற்ற இரகங்களை உருவாக்க முடியும்.
இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொண்டு உயர்தர இரகங்களை காட்சிப்படுத்தவும், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடலில் பங்கு பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே தருமபுரி மாவட்டம், அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.


