தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 23 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வழங்கி துவக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. செந்தில்குமார் கொடியசைத்து ஆம்புலன் சேவையை துவக்கி வைத்தார். மேலும், தருமபுரி நகராட்சி 14வது வார்டு எம்.ஜி.ஆர்., நகரில் மின்சாரம் இல்லாத 10 வீடுகளுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சூரிய ஒளி தகட்டை வழங்கினார்.

பிறகு செய்தியாளர்கள் ஒருவர் திமுகவில் அதிமுகவினர் மேலும் இணைவார்களா? என கேட்டதற்கு கொங்கு மண்டலத்திலிருந்து மேலும் அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் இணை உள்ளனர், அதற்கான பேச்சு வார்த்தை நடந்துக்கொண்டு உள்ளது என்றார்.
முகநூலில் என்னைப்பற்றி மீம்ஸ் போடுறாங்க அது நன்றாக உள்ளது. இது தொடர வேண்டும். மனஅழுத்தமாக இருக்கும் மக்களுக்கு நகைசுவை உணர்வு இருக்கும் மீம்ஸ் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. அவர்களை பாராட்ட வேண்டும் மீம்ஸ் இல்லை என்றால், போரடிக்கும் என கூறினார்.
