Type Here to Get Search Results !

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்க அழைப்பு.

தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை வைக்கக் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.

24.10.2022-ஆம் தேதி அன்று வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையின் போது தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-இன்படி பட்டாசுக் கடை வைக்க உரிமம் கேட்டு இணையம் வழியாக விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தின்படி தற்காலிக பட்டாசு கடை அமைக்கப்படவுள்ள கட்டடம், கல் கட்டடம் அல்லது தார்சுக் கட்டடமாக இருத்தல் வேண்டும். கடையின் இருபுறமும் வழி அமைத்திருக்க வேண்டும். மின்சார விளக்குகள் மட்டும் கடையில் பயன்படுத்தப்பட வேண்டும். 

மேலும், தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையிடமிருந்து உரிமம் வேண்டப்படும் கட்டடத்திற்கு தடையின்மைச் சான்று பெற்றிருத்தல் வேண்டும். கடை வைக்க விண்ணப்பிக்கும் போது இந்நடைமுறைகளை பின்பற்றப்பட வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்: 

  1. விண்ணப்பதாரர் புகைப்படம், 
  2. முகவரிச் சான்று. 
  3. புகைப்படத்துடன் கூடிய ஆதார்/பான் கார்டு/வாக்காளர் அடையாள அட்டை, Etc.,
  4. பட்டா அல்லது சொத்து பத்திரம்,
  5. வாடகைக் கட்டடமாக இருந்தால் நோட்டரி வழக்கறிஞரின் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்தப்பத்திரம்.
  6. உரிமக் கட்டணமாக ரூ.500/- அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான அசல் சலான் 
  7. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரி செலுத்திய இரசீது 
மற்றும் கட்டட வரைபடம்-2 பிரதிகள் மற்றும் உரிய இதர ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்களில் இணைய வழியாக 30.09.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 30.09.2022 ஆம்
தேதிக்கு பின்னர் வரும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies