தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் 5 ம் தேதி சின்னாறு அணை தனது முழுகொள்ளவை எட்டியதால் உபரி நீர் கடந்த ஒரு மாதமாக சின்னாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. சின்னாற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் 50 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து இறுதியில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்த 50 கிலோ மீட்டர் தொலைவிற்கும் ஒரு இடத்தில் கூட தடுப்பணைகள் இல்லாததால், தண்ணீர் முழுவதும், காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சின்னாறு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் இரு தினங்களாக சின்னாறு அணைக்கு 28 ஆயிரம் கன அடிநீர் வந்துக்கொண்டிருகிறது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே திறக்கப்படுவதால், சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சின்னாற்றையொட்டி உள்ள பென்னாகரம்,கோடுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு, நெல், சோளம், தீவனப்புல், மஞ்சள் , வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்திருந்த விளை நிலங்கள் மூழ்கிவாறு மழைவெள்ளம் அடித்து செல்கின்றது.
அதே போல் கிணறுக்கள் மின் மோட்டார்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்த சென்றால் அப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரமின்றி உள்ளனர்.மேலும் நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அதிகாரிகள் வந்து பார்வையற்றும் கண்டுகொள்ள செல்வதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் சின்னாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பல ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியது. முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டாகவும், அணையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் திறந்திருக்கலாம் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுக்கின்றனர்.
நீரில் அடித்து செல்லப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
