தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சார்ந்த திரு. சரவணன் என்ற மாணவன் தனது பெற்றோர்களை இழந்து, தனது பாட்டியோடு வசித்து வருகிறார். இவர் இலக்கியம் பட்டியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பாரமெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கல்லூரி சார்பில் இலவசமாக சீட் வழங்கபட்டது.
இவர் மேலும் தனது கல்வியை தொடர போதிய வசதி இல்லாததால் கல்வி கற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த தருமம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் திரு. சின்னமுத்து மற்றும் அறக்கட்டளை சார்ந்தோர் மாணவன் கல்வி தொடர தேவையான உதவி தொகையை மாணவனிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா பாரமெடிக்கல் கல்லூரி தாளாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, நேரு யுவகேந்திரா சார்ந்த திரு. ஹரிபிரசாத் மற்றும் தருமம் அறக்கட்டளை அமைப்பினர் உடனிருந்தனர்.
