மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சார்பாக இன்று நல்லம்பள்ளி ஒன்றியம் பூமரத்தூரில் காமராஜர் இளைஞர் நற்பணி மன்ற திறப்பு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தருமபுரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு.S.P.வெங்கடேஸ்வரன் அவர்கள் பங்கேற்று நற்பணி மன்றத்தை திறந்து வைத்தார். மேலும் கிராமத்தில் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்து சிறப்புரை வழங்கினார்.
இந்நிகழ்வில் நல்லம்பள்ளி ஒன்றிய சேர்மேன் மகேஸ்வரி பெரியசாமி, கவுன்சிலர் திரு. சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. கீதா கோபாலகிருஷ்ணன், ஒன்றியசெயலாளர் திரு. அன்பு கார்திக், ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, காமராஜர் நற்பணி மன்ற தலைவர் திரு. வெள்ளியங்கிரி, திரு. ஜோதிபாசு மற்றும் மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இயற்கை காப்போம் திரு. தமோதரன் அவர்கள் சார்பபாக இலவச மரக்கன்றுகள் வழங்கபட்டது. இறுதியாக நேரு யுவகேந்திரா சார்ந்த திரு. ஹரிபிரசாந்த் நன்றியுரை வழங்கினார்.
