- விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அறுதியிட்ட நாளில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவராகவோ (அ) படித்துக்கொண்டிருப்பராகவோ இருக்க வேண்டும்.
- 01.07.2023 அறுதியிட்ட நாளில் விண்ணப்பதாரரின் வயது 11 1/2 க்கு குறையாமலும், 13 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.(அதாவது 02.07.2010-க்கு முன்போ 01.01.2012-க்கு பின்னரோ பிறந்திருக்கக் கூடாது) உண்மையான பிறந்த தேதியினை மட்டுமே அளிக்கவேண்டும். பின்னர் மாற்றம் செய்யக்கூடாது.
- மேற்கண்ட தகுதித் தேர்விற்கான விண்ணப்ப படிவம், தகவல் கையேடு (Prospectus) மற்றும் முந்தைய வினாத்தாள்களின் நகல்கள் ஆகியவற்றை பெறுவதற்கு கட்டணமாக பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.600/-ம், SC/ST என்றால் சாதிச் சான்றிதழுடன் ரூ.555/- கட்டணத்தை செலுத்தவேண்டும்.
- 'THE COMMANDANT RIMC DEHRADUN", DRAWEE BRANCH, STATE BANK OF INDIA, TEL BHAVAN, DEHRADUN, (Bank code-01576), UTTARAKHAND என்ற பெயருக்கு வரைவோலையாக (Demand Draft) எடுத்து ' The Rashtriya Indian Military College, Garhi Cantt, Dehradun, Uttarakhand, PIN-248 003" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும், அவ்வாறு அனுப்பும்பொழுது விண்ணப்பதாரரின் முழு முகவரி, பின்கோடு மற்றும் தொடர்பு கொள்ளத்தக்க கைபேசி எண்/தொலைபேசி எண். ஆகியவற்றை தெளிவாக கையினால் எழுத்தப்பட்ட அல்லது தட்டச்சு செய்யப்பட்ட I ( Typed/ Written clearly in CAPITAL LETTERS with pincode and contact number) கடிதத்தை வரைவோலையுடன் அனுப்பி தகுதித் தேர்வுக்கான விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- இராஷட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையவழியான (www.rimc.gov.in) மூலமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். (கட்டணம் பெறப்பட்ட பின் விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு விரைவு அஞ்சல் வாயிலாக இராஷ்ட்ரிய இந்திய இராணுவக்கல்லூரி. கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட் - 248 003 - லிருந்து அனுப்பப்படும்)
மேற்கண்ட தகுதித் தேர்வுக்கான விண்ணப்பத்தினை மேற்கண்ட கல்லூரியில் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணபதாரர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. இராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் விண்ணப்ப படிவங்கள் மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும். நகல்கள் எடுக்கப்பட்ட விண்ணப்பங்களோ, உள்ளூரில் தயார் செய்யப்பட்ட விண்ணப்பங்களோ, ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஒளி நகல் எடுக்கப்பட்ட இராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி (Hologram) முத்திரையிடப்படாத விண்ணப்பபடிவங்கள் நிராகரிக்கப்படும்.
எனவே, மேற்கண்ட தகுதித்தேர்வுக்கான விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்ப படிவங்கள் (இரட்டையாக) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், தழிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்காநகர், சென்னை- 600003 என்ற முகவரிக்கு 15.10.2022-க்குள்; விண்ணப்பித்து பயன்பெறலாம்.
