அதே போல் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஒகேனக்கல், இருமத்தூர் - தென்பெண்ணை ஆறு, நாகாவதி அணை, தொப்பையாறு ஆகிய நான்கு இடங்களில் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இதில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் விநாயகர் சிலை கரைக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதிருந்தது.
இரு தினங்களாக நீர்வரத்து படிபடியாக குறைந்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சிலைகளை கரைக்க அனுமதியளித்துள்ளதால். 60க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பாதுகாப்புபணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பல்வேறுபகுதிகளிருந்து கொண்டு வரும் சிலைகளை ஒகேனக்கல் காவல் நிலையத்தில் அனுமதி டோக்கன் பெற்ற பிறகு சிலையுடன் நான்கு பேரை மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பிறகு முதலை பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றில் சிலையை இறக்கி வைத்துவிட்டு செல்கின்றனர். பக்கதர்கள் கொண்டுவந்த சிலைகளை காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உள்ளூர் பரிசல் ஓட்டிகள் ராட்சத கிரேன் மூலம் சிலைகளை தூக்கி ஆற்றில் கரைக்கின்றனர்.
நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக வந்துக்கொட்டிருப்பதால் சிலை கரைக்க வருபவர்கள் காவிரி ஆற்றங்கரையோரங்களில் இறங்கி குளிக்காமல் இருக்க காவல்துறையினர் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இதனால் ஒகேனக்கல்லுக்கு சிலையை கரைக்க கொண்டுவருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
