நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது, தருமபுரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புற கொண்டாடப்பட்டு வருகிறது.
காவேரி மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் மாவட்ட ஆட்சியர் விநாயகர் சிலைகளை காவேரி ஆற்றில் கரைக்க தடை விதிக்கப்பட்டது, இந்நிலையில் தருமபுரியில் நான்கு நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க தருமபுரி ஆட்சியர் அவர்களால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல், இருமத்தூர், தொப்பையாறு அணை, நாகாவதி அணை ஆகிய நான்கு இடங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை சிலைகளை பக்தர்கள் விநாயகர் சிலைகளை வருகின்றனர், மேலும் இருமத்தூர் ஊராட்சி சார்பில் தென்பண்ணை ஆற்றில் சிலைகளை கரைக்க ஒரு சிலைக்கு நூறு ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
