தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தனி நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து எடப்பாடி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பவரவேற்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்புக்கள் வழங்கினார், தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், மேலும் மேல் தெரு மந்தைவெளியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்து அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோபால், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், அவைத் தலைவர் நாகராசன் மற்றும் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
