இந்த நிகழ்வில் 600 மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பெரியார் புத்தகத்தை வாசித்தனர். நிகழ்விற்கு கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் இல.சதீஸ்குமார் வரவேற்று பேசினார். மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க.கோவிந்த் தலைமை வகித்தார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சா.எழிலன் நோக்கவுரை வழங்கினார்.
நிர்வாக மேலாளர் ரா.கணேஷ், கலைப் பிரிவின் துணை முதல்வர் அ.இம்தியாஸ், அறிவியல் பிரிவின் துணை முதல்வர் சி.தமிழரசு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர், சின்னப்பள்ளத்தூர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மா.பழனி நிகழ்வில் பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.
நிறைவாக தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் நன்றி கூறினார். நிகழ்வில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
