விழாவின் முக்கிய நாளான இன்று காலை கங்கை பூஜை, பூங்கரகம் அழைக்கப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வெகுவிமர்சியாக பம்பை வாத்தியங்கள் வாணவேடிக்கை முழங்க நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு படைக்கும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு பாலபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேக ஆராதனைகள், மகா தீபாரதனை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திட ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நாளை பக்தர்கள் மஞ்சள் நீராடுதலுடன் கோவில் விழா நிறைவு பெறுகிறது. இதில் இதில் சின்னபெரமனூர், பி.அக்ரஹாரம், கெட்டூர், பவளந்தூர், ஜெல்மாரம்பட்டி, மன்னேரி, பூஞ்சோலை ஆகிய கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
