தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொள்ள சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோதர் தருமபுரிக்கு நேற்று வந்தனர். பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஒகேனக்கல் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்லும் மண் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாகவும் இதனால் கர்ப்பிபெண்கள் அவதிப்படுவதாகவும், மேலும் மருத்துவர் சரிவர வருவதில்லை என கேள்வி கேட்டனர்.
இதற்கு அமைச்சர் நாளை ஆய்வு செய்கிறேன் என கூறினார். இதனையடுத்து நேற்று இரவு ஒகேனக்கல்லி அமைச்சர் சுப்பிரமணியம் தங்கி இன்று காலை ஒகேனக்கல்லில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பிறகு மருத்துவனைக்கு செல்லும் சாலையை தார்சாலை அமைக்க உத்திரவிட்டார்.
பின்னர் மருத்துவர்கள் சுழற்சி முறையில் இங்கு பணியாற்றவும் உத்திரவிட்டார். அமைச்சரின் இந்த அதிரடி உத்திரவால் ஒகேனக்கல் பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்சியடைந்தனர்.
