13.09.2022 அன்று மதியம் தருமபுரி ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள மணி டீ ஸ்டால் கடையின் எதிரே ஒரு கைப்பை தனியாக இருந்தது. அங்கு சென்ற மை தருமபுரி தன்னார்வலர் திரு.ஃபரித் அவர்கள் அந்தப் பையை எடுத்து மணி டீ ஸ்டால் உரிமையாளர் திரு.மணி அவர்களிடம் ஒப்படைத்து யாரேனும் உரிமை கோரி வந்தால் ஒப்படைக்குமாறு கூறினார், மாலை யாரும் அதைக் கேட்டு வரவில்லை, எனவே சந்தேகத்தின் பேரில் அந்த திறந்து பார்த்தபோது புது தங்க நகைகள் கைப்பையில் இருந்தது.
உடனடியாக மை தருமபுரி தன்னார்வலர் திரு.தமிழ்செல்வன், திரு.சசி தமிழரசன் அவர்கள் மணி டீ ஸ்டால் உரிமையாளர் திரு.மணி ஆகியோர் தருமபுரி நகர காவல் கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் ஒப்புதலில் பி1 நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.நவாஸ் அவர்களிடம் நகை ஒப்படைத்தனர்.
