தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியை தருமபுரி நாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இன்று துவக்கி வைத்தார்.
இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலிருந்து வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு நவம்பர் மாதம் லக்னோவில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் 8 வயதிற்குட்பட்டவர்கள் முதல் 19 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ப்ளோர், வால், பேரல்பார் உள்ளிட்டவையும், மகளிர் பிரிவில் பேலன்சிங் பீம், வால்டிங் டேபிள், ப்ளோர் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்சியில் ஜிம்னாஸ்டிக் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார் மற்றும் மாநில ஜிம்னாஸ்டிக் சங்க தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
