தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Executive Officer Grade III (Group VIIB) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று (10.09.2022) நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அவ்வையார் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் உள்ள இத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் செயல் அலுவலர் Grade III (Group VIIB) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்றைய தினம் (10.09.2022) சனிக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் இருவேளைகளிலும் நடைபெற்றது. மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Grade IV (GROUP VIII) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளைய தினம் (11.09.2022) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் இருவேளைகளிலும் மொத்தம் 22 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கின்றன.
இத்தேர்வு மையங்களில் சுமார் 6,460 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் மேற்கண்ட தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு செல்லவும், கடைசிநேர அலைச்சல்களை தவிர்க்குமாறும், தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட Grade II (Group VIIB) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வில் மொத்தம் 2956 தேர்வர்கள் தேர்வெழுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் 1787 தேர்வர்கள் இன்று காலையில் (10.09.2022) நடைபெற்ற தேர்வினை எழுதியுள்ளனர், 1169 நபர்கள் தேர்வெழுத வருகை தரவில்லை. மேலும், இன்று (10.09.2022) மாலையில் நடைபெற்ற தேர்வினை 1767 தேர்வர்கள் எழுதியுள்ளனர், 1189 நபர்கள் தேர்வெழுத வருகை தரவில்லை.
இந்த ஆய்வின்போது தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன் கலந்துகொண்டார்.
