இக்கூட்டத்துக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பிஎன்பி இன்பசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், பிரகாஷ், மகேஷ்குமார் செல்லதுரை சிட்டிபாபு சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐடி விங் மாநில அமைப்பாளர் கோவி லெலின் திராவிட இயக்க வரலாறு குறித்தும் சூர்யா சேவியர் மாநில சுயாட்சி குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் காளியப்பன், துரைசாமி ஒன்றிய கவுன்சிலர்கள் மடம் முருகேசன், செல்வராஜ், சபரிநாதன், பேரூர் கழக செயலாளர்கள் வீரமணி சண்முகம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கார்த்திக் உட்பட பல நிர்வாகி கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞரணியினர் வெண் சீருடையில் பங்கேற்று திராவிட மாடல் குறித்து பயிற்சி பெற்றனர். இறுதியில் பென்னாகரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன் நன்றி கூறினார்.
