தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் புலிகல் ஊராட்சியில் பத்து ரூபாய் இயக்கத்தின் மூலம் தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி மற்றும் ஊராட்சியின் தேவையான அடிப்படை வசதிகளையும் மற்றும் வளர்ச்சிப் பாதைக்கு தேவையான மனுக்களை எவ்வாறு தயார் செய்வது, தயார் செய்த மனுவை அனுப்பப்பட்டு, பிறகு அவற்றை எவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மூலம் கேள்வி கேட்பது போன்ற இளைஞர்களுக்கு சட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் மாற்றத்திற்கான திறனாளிகள் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வம், பாலக்கோடு ஒன்றிய செயலாளர் திரு தர்மசாஸ்தா, மற்றும் இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
