தருமபுரி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் தலசீமியா குழந்தைகளுக்கு அவசர ரத்ததான தேவை அறிந்து ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஏழு நபர்கள் இன்று ரத்ததானம் அளித்தனர்.
கல்வி போதனையுடன் சமூகப் பணிகளையும், உயிர்காக்கும் இரத்த தானத்தையும் முன்னெடுத்தி கொண்டு செல்லும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை மருத்துவ கல்லூரி மருத்துவமனை குருதி வங்கி மருத்துவர் திருமதி.லாவண்யா அவர்கள் மிகவும் பாராட்டினார்.
இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் Dr. சா. எழிலன், துணை முதல்வர் Dr. சி. தமிழரசு, நிர்வாக அலுவலர், Er. ரா.கணேஷ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திரு. இரா. சதீஸ் குமார், திரு.பா.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
