தர்மபுரி மாவட்டம் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், சங்கங்கள் சார்பாக மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.
- கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்.
- கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வழங்கவேண்டும்.
- பணி பாதுகாப்பு மற்றும் 5 தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும்
போன்ற முக்கிய கோரிக்கைவலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் தலைமை வகித்த தர்மபுரி மாவட்ட தலைவர் சி. மகேஷ்குமார் மாவட்ட பொருளாளர் சின்னப்பையன், T. மாது, கமலேசன், ராதாகிருஷ்ணன், மணிகண்டன், ஆனந்தி, வனிதா, சந்திரன், மணியம்மை, வெங்கடேஷ், நா. சின்னமணி ஆகியோர் தலைமை வகித்தனர், இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாநில செயலாளர் AITUC M.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் CPI எஸ். கலைச்செல்வம், மாவட்ட தலைவர் M.மாதேஸ்வரன் AITUC, மாவட்ட பொது செயலாளர் K. மணி AITUC, ஆகியோர் சிறப்புரையாற்றினர், இக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
