தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கடிதத்தின்படி தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10 நிறைவேற்றப்படாத பணிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால தேவையான முக்கிய திட்ட பணிகள் நிறைவேற்ற வேண்டி இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடன் மனு வழங்கப்பட்டது.
10.கோரிக்கைகள்:-
- காவேரி உபரி நீர் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும்.
- தருமபுரி நகர் பகுதியில் உள்ள சனத்குமார் நதியை தூர்வார வேண்டும்.
- நல்லம்பள்ளி ஒன்றியத்தில் பரிகம் முதல் மலையூர் காடு 3.2 கிலோ மீட்டர் வரை தார்சாலை அமைக்க வேண்டும்.
- தொப்பையாற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணை கட்ட வேண்டும்.
- தருமபுரி இராமக்கால் ஏரி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.
- பழைய இண்டூர் முதல் நாகர்கூடல் வரை புதிய மேம்பாலம் அமைத்து தார்சாலை மேம்பாடு செய்த வேண்டும்.
- தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மகளிர் கல்லூரி திறக்கப்பட வேண்டும்.
- தருமபுரி நகர,புறநகர பேருந்து நிலையத்தை உயர் நவீன மற்றும் ஈரடுக்கு பேருந்து நிலையம் உயர்த்தப்பட வேண்டும்.
- நல்லம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.
- நல்லம்பள்ளி தாலுக்காவை இரண்டாக பிரித்து இண்டூரில் ஒரு தாலுக்கா அமைக்க வேண்டும்.
ஆகிய திட்டங்களை அடங்கிய இம்மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய பாமக கட்சி நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரி மோகன், மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பால கிருஷ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டு மனு வழங்கப்பட்டது.
