தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளரச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (10.09.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சியில் தொப்பம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் காத்திருப்போர் அறை கட்டும்பணி நடைபெற்று வருவதையும், தசராஅள்ளி ஊராட்சி போடிநாயக்கன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.9.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பின் மகளிர் சுயஉதவிக்குழுவினரின் பயன்பாட்டிற்கான கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், இதே ஊராட்சியில் இதே நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் திருமதி.இந்திராணி மற்றும் திருமதி.பிரியா ஆகியோரது நெல்லி மரக்கன்று, புளியமரக்கன்று உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளதற்கு நீர் சேமிப்பு பாதுகாப்பு கரை அமைக்கப்பட்டு வருவதையும், கதிர்நாயக்கன அள்ளி ஊராட்சிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், இதே ஊராட்சியில் பழங்குடியினர் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2.80 இலட்சம் மதிப்பீட்டில் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருவதையும், இதே ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின்கீழ் ரூ.4.77 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வி.ஜி.மரியாம் ரெஜினா, மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஜி.ரவிச்சந்திரன், திரு.வி.பி.இரவிச்சந்திரன், ஒன்றிய பெறியாளர் திருமதி.கே.பழனியம்மாள், உதவி பொறியாளர் திரு.அன்பழகன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
