Type Here to Get Search Results !

சோமனஹள்ளி ஶ்ரீ திரெளபதியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயஅஷ்டபந்தன மகாகும்பாபிஷேக பெருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.

இந்த விழா கடந்த 5ம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.  இன்று அதிகாலை  கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி, ஸ்ரீ திரெளபதியம்மன், தர்மராஜா மூல மந்திரம், நாடி சந்தானம் நடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடத்தை  கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். 

பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து   ஶ்ரீ திரெளபதியம்மனுக்கு பல்வேறு திரவியங்கள்,  பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்புஅலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை   12 கிராம ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies