Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் ஆசிரியர் தின விழா அமைச்சர்கள் பங்கேற்பு.

பென்னாகரத்தில் ஆசிரியர் தின விழா 70 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் 8.75 கோடி மதிப்பீட்டில் +1 வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் துவக்க விழா, அமைச்சர்கள் பங்கேற்பு.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், ரூபாய் 8.75 கோடி மதிப்பீட்டில் தர்மபுரி மாவட்டத்தில் பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் துவக்க விழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே சாந்தி தலைமை தாங்கினார் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி வரவேற்புரை நிகழ்த்தினார் இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், பாலக்கோடு ராஜா அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டியும், பொதுமக்களுக்கு இலவச இணைய வழி பட்டா, விபத்து மற்றும் மரணம் நிதி உதவி, மாற்றுத்திறனாளி நிதி உதவி, விதவை நிதிஉதவி, மற்றும் திருமண நிதி உதவி, குடும்ப அட்டை உட்பட பல நல திட்ட உதவிகள் வழங்கியும், தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி உட்பட 111 பள்ளிகளில் 11-ம் வகுப்பு  மாணவர்களுக்கு ரூபாய் 8.75 கோடி மதிப்பீட்டில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி  மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். 

மேலும் பாலக்கோடு பகுதியில் தண்ணீர் சிக்கிய 3 மாணவர்களை காப்பாற்றிய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை ஆணையாளர் நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி, சார் ஆட்சியர் சித்ரா விஜயன், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பென்னாகரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி என்பி இன்பசேகரன், தர்மபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆசிரியர் பெருமக்கள் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies