தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
இதில் 30 வீட்டு பங்காளிகள் ஒன்றினைந்து இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா ளித்தார். இதையடுத்து பக்தர்கள், ஆடு, கோழி, பலியிட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
