Type Here to Get Search Results !

பேரிடர் மேலாண்மை அலுவலகத்தின் சார்பில் பேரிடர் மீட்பு, வெள்ளத்தடுப்பு, பாதுகாப்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி.

தருமபுரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் எதிர்பார்க்கப்படக் கூடிய பகுதிகளில் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்தின் சார்பில் பேரிடர் மீட்பு, வெள்ளத்தடுப்பு, பாதுகாப்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (01.09.2022) நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் ஒகேனக்கல், நாகமரை, குருக்கலையனூர், ஏர்கோல்பட்டி மற்றும் அரூர் வட்டத்தில் பெரிய ஏரி ஆகிய 5 இடங்களில் இன்றைய தினம் பேரிடர் மீட்பு, வெள்ளத்தடுப்பு, பாதுகாப்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, காவல் துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தீயணைப்புத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பேரிடர் மீட்புக்குழுக்கள் எவ்வாறு பத்திரமாக மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் எவ்வாறு அளிக்கப்படுகின்றது என்பது குறித்தும் தத்ரூவமாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.இரா.விஸ்வநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.ஆர்.கே.கவிதா, உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாசலம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) திருமதி.வி.கே.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி.என்.பழனிதேவி, தருமபுரி மாவட்ட பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் திரு.கா.ரமேஷ், அரூர் மற்றும் பென்னாகரம் வட்டாட்சியர்கள் உட்பட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, காவல் துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies