தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் வரும் 4ஆம் தேதி ஞாயிறு காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் நடக்கிறது.
பொதுமக்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள எண் விபரங்களுடன் தொடர்புடைய ஓட்டுச்சாவடி மையங்களில் நிலை அலுவலரிடம் படிவம் '6பி' பூர்த்தி செய்தோ அல்லது www.nvsp.in, www.voterportel.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 'வோட்டர் ஹெல்ப்லைன்' அலைபேசி செயலி மூலமாகவோ வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெற வேண்டும், என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
