தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் அறிவது. முப்படைகளில் (Army, Navy Aif Force) சேர்ந்து பயிற்சி பெறும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு (மகன்/மகள்) அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தொகுப்பு நிதியிலிருந்து தொகுப்பு மானியமாக ஒரே தடவை மட்டும் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.
எனவே இராணுவப்பணிகளில் சேர்ந்து பயிற்சி பெறும் மற்றும் பயிற்சி முடிவுற்று படைப்பணியில் சேர்ந்த பின்னர் இம்மானியம் பெறாதவர்களும் இம்மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- Permanent Commissioned Officer - ரூபாய்.1,00,000.00
- Short Commissioned Officer - ரூபாய்.50,000.00
- Junior Commissioned Officer/ Other Ranks - ரூபாய். 25,000.00
எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் அதிகளவில் தங்களது மகன் மற்றும் மகளை இராணுவப்பணிக்கு சேர முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான மானியம் பெற்று பயன் பெறலாம், மேலும் விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
