விழாவில் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை திருமதி. உமா மகேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு புத்தகம், வாழ்த்து அட்டை, மற்றும் கவிதை பிரதியினை வழங்கி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்கள் முன்னிலையில் பங்கேற்றது மேலும் சிறப்பான அமைவாக அமைந்தது, இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிரியர் சி.சரவணன் மேற்கொண்டார் மற்றும் அவருடன் உதவி திட்ட அலுவலர் ஆசிரியர் திரு தாமோதரன், திரு கிருஷ்ணன், வேளாண்துறை ஆசிரியர், ஆசிரியர் மன்ற செயலர் திரு.முனியப்பன் போன்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
முன்னதாக பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரிய பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து சென்றார்.
