தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சின்னாற்றின் குறுக்கே உள்ள தொல்லகாது பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (48) இவரது மனைவி கெளரம்மாள் (45) மகன் குமார் (30) மற்றும் மகேஸ்வரி (33) ஆகியோர் இன்று காலை 7 மணிக்கு 7 கறவை மாடுகள் 10 ஆடுகளை மேய்ச்சலுக்காக தொல்லகாது ஆற்றின் நடுவே உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்காக அழைத்து சென்றனர்.
மேய்ச்சலில் இருந்த போது திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து 3 அடி தண்ணீர் 15 அடியாக உயர்ந்தது. இதனால் வெளியே வர முடியாமல் செய்வதறியாது திகைத்தவர்கள் பாலக்கோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் மற்றும் போலீசார் 30 அடி நீளமுள்ள ஆற்றின் கரையின் இருபுறம் கயிறு கட்டி குமார் என்பவரை மீட்டனர். மற்ற மூவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அவர்களையும் மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
