கர்நாடகா காவிரி நீர் பிடிப்பதிலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் குறைவு விதமாக இருந்து வருகிறது இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி 43 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை நிலவரப்படி 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது இதனைத் தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள சீனிய அருவி மெயின் அருவி ஐவர்பானி ஆகிய கருவிகளை தண்ணீர் மூழ்கடித்தவாறு செல்கிறது நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.
