2022-2023 ம் கல்வியாண்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான 10 கிலோமீட்டர் CROSS COUNTRY RACE. 15-09-2022 வியாழக்கிழமை, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
200 க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டிகளில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இளம்அறிவியல் தாவரவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி M.சாலினி கல்லூரியின் சார்பில் பங்ககேற்று இரண்டாம் இடம்-வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப்படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இப்போட்டிகளை பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மதிப்புமிகு முனைவர் ஜெகந்நாதன் அவர்கள் துவக்கிவைத்தார். சாதனைப்படைத்த மாணவி சாலினி-க்கு பல்கலைக்கழக தகுதிச்சான்றிதழை பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முனைவர் R.பாலகுருசாமி அவர்கள் வழங்கி வாழ்த்தினார்.
போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் (பொ) முனைவர். கே.வெங்கடாசலம் செய்திருந்தார், சாதனை மாணவிக்கு தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.கி.கிள்ளிவளவன், உடற்கல்வி இயக்குநர் முனைவர் பாலமுருகன், இருபால் பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப்பணியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்தினர்.
