வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில் வரவேற்பு ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், முன்னாள் நகர செயலாள் சங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தலைமை உரை ஆற்றிய முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமார் கே.பி.அன்பழகன் பேசியதாவது. அண்ணா விட்டு சென்ற பணிகளை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் பின்பற்றி வருகின்றனர்.
பாலக்கோடு தொகுதியில் 20க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்திய பெருமை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சாரும், கல்வியிலேயே முதன்மை மாவட்டமாக தர்மபுரி மாவட்டமாக திகழ்கிறது. ஒரே வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருமண உதவி தொகையை நிறுத்தியதால் பொதுமக்களின் எதிர்ப்பை மறைக்கவே மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குகின்றனர்.
மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு இதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி.அதிமுகவின் திட்டமான தூள் செட்டி ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணியினை தாமதபடுத்தி வருகின்றனர்.
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றியது, தர்மபுரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகள் கொண்டு வந்த பெருமை அதிமுக ஆட்சியே காரணம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளியில் 93 ஏக்கர் நிலத்தில் டிப்ளோமோ விவசாய கல்லூரியை அதிமுக கொண்டு வந்தது, அதனை திமுக மக்கள் விரோத அரசு அந்த கல்லூரியை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்க்கு மாற்றி இப்பகுதி மக்களை வஞ்சித்துள்ளது.
அதிமுக அரசு நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கியது. மாரண்டஅள்ளி அருகே ராசிக்குட்டை பகுதியில் 30 ஏக்கர் நிலத்தில் உணவு பூங்கா திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது, மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்று தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு உடன் தேர்வு திட்டம் கொண்டு வந்தது புரட்சி தலைவி அம்மா அவர்கள்.
தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி, ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம், போன்ற மக்கள் நல திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது, தமிழக கல்லூரியில் 1666 புதிய பாட பிரிவுகளை கொண்டு வந்தது அதனால் தமிழகம் இன்று உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது., அதிமுக செய்த திட்டங்களுக்கு, அடுத்தவன் குழந்தைக்கு பெயர் வைப்பது போல திமுக பெயர் வைக்கும் அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது.
திமுகவின் ஏமாற்று வேலைகளை புரிந்து கொண்டு மக்கள் அதிமுகவிற்க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார், இப்பொதுக் கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், மாவட்ட கவுண்சிலர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன். காரிமங்கல ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ், காந்தி மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இறுதியாக நகர செயலாளர் ராஜா நன்றி தெரிவித்தார்.
