தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே போயர் சாலை பகுதியை சேர்ந்தவர் பெரியம்மா (வயது. 60) இவருடைய கனவர் பெருமாள் விவசாயி, இவர்கள் கடந்த ஜீன் மாதம் 2.ம் தேதி காவேரிப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு அன்று மாலை மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
பாலக்கோடு அருகே அன்னாமலைஅள்ளி கூட்டுறவுசொசைட்டி அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வாலிபர் பெரியம்மாவின் கழுத்தில் இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் நேற்று தர்மபுரியில் உள்ள நகை கடையில் நகை விற்க முயன்றபோது போலீசாரிடம் சிக்கினான். பிடிபட்டவன் சேலம், கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த நாகராஜ் விஜய் (25) தெரியவந்தது, அவனிடமிருந்து நகையை மீட்ட பாலக்கோடு போலீசார் வாலிபரை கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
