மேலும் வேளாண்மை கிடங்கு அரூர் அலுவலகத்தில் தற்சமயம் விவசாயிகளுக்கு உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்கள் உளுந்து வம்பன் 8, 9 ,10 மற்றும் பாசிப்பயிறு co 8 மற்றும் காராமணி COCP 7 , வம்பன் 3 ஆகிய விதைகள் இருப்பில் உள்ளது உளுந்து ஏக்கருக்கு 400 கிலோவும் பாசிப்பயிறு ஏக்கருக்கு 450 கிலோவும் காராமணி ஏக்கருக்கு 350 கிலோ மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விவசாயிகள் பின்வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயறு வகை பயிர்களில் அதிக லாபம் பெற அறிவுரை வழங்கி உள்ளார்கள். குறிப்பாக பயறு வகை பயிர்களை வரிசை முறையில் நடவு செய்ய வேண்டும் பின்பு பூ பூக்கும் தருணத்தில் இரண்டு சதவீத டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு 2 கிலோ பல்ஸ் ஓன்டர் இவற்றில் ஏதாவது ஒன்றை படுத்தி மகசூலை அதிகரிக்கலாம் மேலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண அட்டை பயன்படுத்த வேண்டும் அல்லது பூச்சிகளை கட்டுப்படுத்த இரண்டு முதல் மூன்று சதவீத வேப்ப எண்ணெய் கரைசலை தெளிக்க வேண்டும் மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறுகிய காலத்தில் பயறு வகை பெயர்களில் விதைப் பண்ணை அமைத்து விவசாயிகள் அதிகம் லாபம் பெற வேளாண்மை உதவி இயக்குனர்( பொ ) திரு குமார் அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார்கள்.
