பென்னாகரத்தில் அவ்லியா அல்லாஹ் ஹஸ்ரத் யாரப் அவர்களின் உரூஸ் மற்றும் சந்தனக்குட விழா, சந்தனக்கூட ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அமைந்துள்ள ஹஸ்ரத் யாரப் நிஸானிலிருந்து பென்னாகரம் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி P M தவுலத் பாஷா, சேலம் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி S R அன்வர் ஆகியோர் தலைமையில் வான வேடிக்கை மற்றும் புகாராக்களின் ஜர்பாத் வித்தைகளுடன் பென்னாகரம். ஆசூரூப் கானாவிலிருத்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆசூரூப் கானாவை வந்தடைந்தது.
பாத்திஹாவுக்கு பின் தப்ரூக் மற்றும் சந்தனம் வழங்கப்பட்டது, நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பென்னாகரம் ஹஸ்ரத் யாரப் கமிட்டியினர் செய்திருந்தனர். உரூஸ் மற்றும் சந்தனக்குட விழா, சந்தனக்கூட ஊர்வலத்தில் பெண்ணாகரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
