மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
செப்டம்பர் 5 டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் தேசிய ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பல மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும், மாணவர்களின் சாதனைக்கும் ஒளி விளக்காக இருந்து வரும் ஆசிரியர்களை போற்றும் விதமாக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. தருமபுரி நல்லானூர் மருதம் நெல்லி கல்வி குழுமத்தின் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் ஒன்றிணைந்து இன்று ஆசிரியர் தின விழாவை சிறப்பித்தனர்.
கல்லூரி முதல்வர் சா.எழிலன் அவர்கள், துணை முதல்வர்கள் திரு.இம்தியாஸ், திரு.தமிழரசு,கல்லூரி நிர்வாக அலுவலர் திரு.கணேஷ், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.
